சமையலறையில் புதினா செடியை வளர்த்து வந்தால் சிலந்தி பூச்சிகள் வராது.
இரவில் படுப்பதற்கு முன் பிரிட்ஜின் போன்ற சமையலறையின் மூளைகளில் போட்டு விட்டால் கரப்பான் பூச்சிகள் தொல்லை இருக்காது.
காய்ந்த எலுமிச்சை ஆரஞ்சு தோள்களை அலமாரியில் வைத்தால் பூச்சிகள் வராது.
எலுமிச்சை சாற்றுடன் பேக்கிங் சோடாவை கலந்து தேய்க்க குழாய்கள் பளிச்சிடும் .
வெங்காயம் நறுக்குவதற்கு முன் கத்தியை சூடு செய்து விட்டால் கண்களில் எரிச்சல் இருக்காது.
மோர் குழம்பில் மிளகாயை அரைத்து கலப்பதோடு மோர் மிளகாயை வறுத்து போட்டு விட்டால் ருசியாக இருக்கும்.
பீட்ரூட் சூப் செய்யும் போது தக்காளியையும் வேகவைத்து மிக்ஸியில் அரைத்து சூப் செய்தால் சுவையாக இருக்கும் .
கீரையை சமைக்கும்போது ஒரு தேக்கரண்டி சர்க்கரையை சேர்த்தால் சத்து வீணாகாது .
சூடான உணவுப் பொருட்களில் எலுமிச்சையை சேர்த்தால் உணவு கசப்பாகிவிடும் .சூடு ஆறியவுடன் சேர்ப்பது தான் சரி .
கேசரி தயாரிக்கும் போது இரு பேரிச்சம்பழங்களை பொடியாக அரிந்து போட்டால் சுவை சற்று கூடுதலாக இருக்கும்.