தேவையான பொருட்கள்
மாம்பழம் - ஆறு
சர்க்கரை - கால் கப்
ஏலக்காய் தூள் - அரை கரண்டி
வெதுவெதுப்பான பால் - அரைக்கப்
குங்குமப்பூ - சிறிதளவு
நறுக்கிய பிஸ்தா - தேவையான அளவு
எண்ணெய் - பொறிப்பதற்கு
செய்முறை
ஆம்ரஸ் செய்ய ஒரு மாம்பழத்தின் தோலை நீக்கி சிறுசிறு துண்டுகளாக நறுக்கவும் .
அடுத்து மிக்ஸி ஜாரில் நறுக்கிய மாம்பழம், சர்க்கரை, ஏலக்காய் தூள் மற்றும் குங்குமப்பூ பால் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
அரைத்த விழுதை வேறு பாத்திரத்திற்கு மாற்றி ஃப்ரிட்ஜில் வைக்கவும் .
பூரி செய்ய தயார் செய்த பூரி மாவை சிறு சிறு உருண்டைகளாக பிரிக்கவும்.
மாவு உருண்டையை சப்பாத்தி கல்லில் வைத்து தேய்க்கவும்.
ஒரு கடாயில் பொரிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
எண்ணெய் சூடானதும் பூரியை தேய்த்து இருபுறமும் பொன் நிறமாக பொறிக்கவும்.
ஃப்ரிட்ஜில் வைத்த ஆம்ப்ரஸை எடுத்து பரிமாறும் கிண்ணத்தில் மாற்றி நறுக்கிய பிஸ்தா மற்றும் குங்குமப்பூ கொண்டு அலங்கரிக்கவும் .
சூடான பூரியை ஜில்லென்ற ஆம்ரசுடன் பரிமாறவும்.