ஊற வைக்க தேவையான பொருட்கள்
லெக்கான் சிக்கன் - அரை கிலோ
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மல்லித்தூள் - ஒரு தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - மூன்று தேக்கரண்டி
தயிர் - அரை கப்
பிரியாணிக்கு தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி - ஒரு கப்
நெய் - 3 தேக்கரண்டி
எண்ணெய் - இரண்டு தேக்கரண்டி
பட்டை - ஒரு துண்டு
பிரிஞ்சி இலை - ஒன்னு
ஏலக்காய் - 4
இலவங்கம் - நான்கு
அன்னாசிப்பூ - ஒன்னு
பெரிய வெங்காயம் - ரெண்டு
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லி - பொடியாக நறுக்கியது
சிறிதளவு
புதினா பொடியாக நறுக்கியது - சிறிதளவு
பச்சை மிளகாய் - ஆறு
தக்காளி - மூணு
செய்முறை
லெகான் சிக்கனை கழுவி சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
அதில் கால் தேக்கரண்டி மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள் ,ஒரு தேக்கரண்டி மல்லித்தூள், சிவப்பு மிளகாய் தூள் மூணு, தேக்கரண்டி எண்ணெய், அரை கப் தயிர் ஆகியவற்றை சேர்த்து கலந்து பத்து முதல் 30 நிமிடங்கள் ஊறவைத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் ஒரு கப் பாஸ்மதி அரிசி சேர்த்து 15 நிமிடங்களுக்கு ஊற வைத்துக் கொள்ளவும்.
ஒரு பிரஷர் குக்கரில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் மற்றும் 2 தேக்கரண்டி நெய் சேர்த்து சூடாக்கவும்.
சூடானதும் ஒரு பிரிஞ்சி இலை, ஒரு அன்னாசிப்பூ, ஒரு துண்டு பட்டை, நான்கு ஏலக்காய், 4 லவங்கம் ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும்.
அதனுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கிக் கொள்ளவும்.
இப்பொழுது ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, நான்கு பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, புதினா சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கி கொள்ளவும்.
அதனுடன் ஒரு தக்காளி சேர்த்துக் கொள்ளவும் தக்காளி மென்மையாகும் வரை வதக்கவும் .
இப்போது ஊற வைத்த சிக்கனை சேர்த்து பத்து நிமிடங்களுக்கு முடி வைத்து வேக வைக்கவும்.
சிக்கன் ஓரளவு வெந்த பின்னர் ஊற வைத்து தண்ணீர் வடித்த பாஸ்மதி அரிசி சேர்த்துக் கொள்ளவும்.
ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப் வீதம் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
இறுதியாக ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து பிரஷர் குக்கரை மூடி மூன்று விசில் வைக்கவும்.
பிரஷர் ரிலீஸ் ஆனதும் பிரியாணியை மென்மையாக கிளறி விடவும்.
இப்போது சுவையான சிக்கன் பிரியாணி தயார்.