வாழைப்பழ அப்பம்

kuttybabuPPT
0
வாழைப்பழ அப்பம்

தேவையான பொருட்கள் 

கோதுமை மாவு - அரை கப் 

அரிசி மாவு - 2 கப் 

நன்கு கனிந்த பூம் பழம் - 2 

வெல்லம் - ரெண்டு கப் 

தேங்காய் பல் சிறு துண்டுகளாக -  இரண்டு டேபிள் ஸ்பூன்

 ஏலக்காய் தூள் - ஒரு டீஸ்பூன்

 நெய் - அரை கப்

 எண்ணெய் - தேவைக்கேற்ப 

ஆப்ப சோடா - 2 சிட்டிகை 

செய்முறை 

கோதுமை மாவு மற்றும் அரிசி மாவினை ஒன்றாக கலந்து கொள்ளுங்கள் .

பூம்பழத்தை துண்டுகளாக்கி மிக்ஸியில் அடித்து மாவுடன் சேருங்கள்.

 தேங்காய் துண்டுகளை ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யில் சிவக்க வறுத்து சேருங்கள்.

 வெல்லத்தை அரைக்க தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கரைந்து கொதித்ததும் வடிகட்டி சூடாக மாவில் ஊற்றுங்கள் .

அத்துடன் ஏலக்காய் தூள், ஆப்ப சோடா சேர்த்து நன்றாக கரையுங்கள்.

 இது இட்லி மாவு பதத்தில் இருக்க வேண்டும் .

குழி பணியாரக் கல்லில் நெய், எண்ணெய் கலந்து ஊற்றி மாவு சிறிது ஊற்றி தீயில் நன்கு வந்ததும் எடுங்கள்.
 மறுப்புரம் திருப்பி விட்டு வந்ததும் எடுத்து சூடாக பரிமாறுங்கள்.

Post a Comment

0Comments
Post a Comment (0)