பேரிச்சம் பழ கேக்

kuttybabuPPT
0
பேரிச்சம் பழ கேக் 
தேவையானவை 

வெண்ணெய் - 250 கிராம் 

மைதா மாவு - 400 கிராம் 

பேரிச்சம்பழம் - 250 கிராம் 

பொடி செய்த சர்க்கரை - 200 கிராம்

 சமையல் சோடா - 2 தேக்கரண்டி

 அக்ரூட் பருப்பு - நான்கு மேசை கரண்டி

 பேக்கிங் பவுடர் - இரண்டு தேக்கரண்டி

 பால் - சிறிதளவு 

செய்முறை

முதலில் மைதா மாவை சலித்துக் கொண்டு வெண்ணையை சேர்த்து ரொட்டித் தூள் போல் ஆகும் வரை கலக்க வேண்டும் .

துண்டுகள் செய்த அக்ரூட், கொட்டை நீக்கி துண்டுகளாக்கிய பேரிச்சம் பழம், பாெடித்த சர்க்கரை உடன் சேர்த்து மாவுடன் கலக்கி கொள்ள வேண்டும்.

 சமையல் சோடா, பேக்கிங் பவுடர் இவற்றை பாலில் போட்டு நன்றாக கலக்கி அதையும் சேர்க்க வேண்டும்.

 இக்கலவையை 9 அங்குள்ள பேக் செய்யும் வட்டத்தட்டில் போட்டு நெய் தடவிய மாவு தூவிய தட்டில் வைக்க வேண்டும் .
இதை சுமார் ஒரு மணி நேரம் சூட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)