காளான் மிளகு வறுவல்

kuttybabuPPT
0
காளான் மிளகு வறுவல் 

தேவையானவை

காளான் - 200 கிராம்

 வெங்காயம் - ரெண்டு

 பச்சை மிளகாய் - 2 

தக்காளி - 2

 இஞ்சி பூண்டு விழுது - சிறிதளவு

 மல்லித்தூள் - ரெண்டு தேக்கரண்டி

 மஞ்சத்தூள் - ரெண்டு தேக்கரண்டி

 மிளகாய் தூள் - தேவையான அளவு

 மிளகுத்தூள் - ரெண்டு தேக்கரண்டி

 சோம்பு - ஒரு தேக்கரண்டி 

கடலை  எண்ணெய் -  தேவையான அளவு

 உப்பு - தேவையான அளவு

 செய்முறை 

முதலில் பாத்திரத்தில் எண்ணெய் உற்றவும் எண்ணெய் காய்ந்தவுடன் சோம்பு சேர்த்து பொரித்துக் கொள்ளவும் .

பிறகு நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும் .

சிறிது நேரம் கழித்து இஞ்சி பூண்டு விழுது, தக்காளி, காளான் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

 பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், சோம்புத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதங்க சிறிது நீரை தெளித்து விடவும்.

 கடைசியில் அடுப்பிலிருந்து களானை இறக்கும் பொழுது இரண்டு தேக்கரண்டி மிளகுத்தூள் தூவி இறக்கவும்.
 சுவையான காளான் மிளகு வறுவல் தயார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)