ஓமு ரைஸ்

kuttybabuPPT
0
ஓமு ரைஸ் 

தேவையான பொருட்கள் 

வடித்த சாதம் - ஒரு கப் 

குடைமிளகாய் - கால் 

வெங்காயம் - கால் 

மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி 

வேக வைத்த மக்காச்சோளம் - ஒரு தேக்கரண்டி 

தக்காளி சாஸ் - 4 தேக்கரண்டி

 முட்டை - இரண்டு

 உப்பு ,எண்ணெய் - தாளிக்க மற்றும் ஆம்லெட் போட 

செய்முறை 

வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து கொள்ளவும்.

 குடைமிளகாயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

  மற்ற தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

 வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய் போட்டு வதக்கவும்.

 வெங்காயம், குடைமிளகாய் வதக்கியதும் அதனுடன் சாதம் மிளகுத்தூள், சேர்த்து கிளறி விடவும்.

 அதன் பிறகு தக்காளி சாஸ் சேர்த்து நன்கு கிளறி அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும் .

பிறகு அதில் மக்காச்சோளத்தை சேர்த்து கலந்து விடவும்.

 ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்து வைத்துக் கொள்ளவும்.

 அடுப்பில் தோசை கல் அல்லது அகலமான தவாவை வைத்து ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் அடித்து வைத்துள்ள முட்டையை அகலமான ஆம்லெட்டாக உற்றி இரண்டு நிமிடம் கழித்து ஆம்லெட் வெந்ததும் செய்திருக்கும் பிரைட் ரைஸ் ஆம்லேட்டின் நடுவில் வைக்கவும்.
 பின்னர் ஆம்லெட்டின் இரு பக்கங்களை உட்புறமாக மூடினால் ஓமு ரைஸ் தயார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)