சைவ மட்டன் கோலா உருண்டை

kuttybabuPPT
0
சைவ மட்டன் கோலா உருண்டை

தேவையான பொருட்கள்

காலிஃப்ளவர் - ஒன்னு 

மீல் மேக்கர் - ஒரு கைப்பிடி

 தேங்காய் - அரை மூடி 

வெங்காயம் - 2 பெரியது

 கசகசா - 2 டீஸ்பூன்

 பூண்டு - 10 பல்

 இஞ்சி - ஒரு துண்டு

 பச்சை மிளகாய் - ஆறு 

மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

 பொட்டுக்கடலை மாவு - 4 டேபிள் ஸ்பூன்

 கறிவேப்பிலை - ஒரு கொத்து 

முந்திரி - 7 

உப்பு - தேவையான அளவு

 நெய் - ஒரு குழி கரண்டி 

செய்முறை

காலிஃப்ளவரை நன்கு சுத்தம் செய்து துருவி எடுக்கவும்.

 மீல் மேக்கரை சுடுதண்ணீரில் போட்டு பிழிந்து வைக்கவும்.

 அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி கசகசா, பூண்டு, வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் துருவி வைத்த காலிஃப்ளவர், மீல் மேக்கர், தேங்காய், முந்திரி அனைத்தையும் ஒன்றுக்கு ஒன்றாக போட்டு வறுக்கவும்.

 ஆறியதும் கருவேப்பிலை மற்றும் பொட்டுக்கடலை மாவை சேர்த்து மிக்ஸியில் இரண்டு சுற்று சுற்றி எடுக்கவும்.

 பிறகு நன்றாக பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்.

 கடாயில் எண்ணெய் ஊற்றி உருண்டைகளை ஒவ்வொன்றாக போட்டு பொரித்து எடுக்கவும்.
 சுவையான சைவம் மட்டன் கோலா உருண்டை தயார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)