தேவையானவை
பாகற்காய் - ஒரு கப்
நீட்டு அரைக்க சின்ன வெங்காயம் - 15
பூண்டு பற்கள் - எட்டு
இஞ்சி - ஒரு துண்டு
வரமிளகாய் - 3
தனியா பவுடர் - ஒரு டேபிள் ஸ்பூன்
தேங்காய் துருவல் - அரை கப்
பாகற்காய்வுடன் சேர்த்து வேக வைக்க புளிக்கரைசல் - ரெண்டு டேபிள் ஸ்பூன்
துருவிய வெல்லம் - ஒரு டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
தாளிக்க
எண்ணெய் - இரண்டு டேபிள் ஸ்பூன்
கடுகு - ஒரு டீஸ்பூன்
பெரிய வெங்காயம் - ஒன்று
கருவேப்பிலை - 10 இதழ்கள்
மேலே தூவ நறுக்கிய மல்லித்தழை - இரண்டு டேபிள்ஸ்பூன்
செய்முறை
பாகற்காயின் காயின் காம்பை நீக்கி புளி கரைசல், உப்பு, மஞ்சள் தூள், வெல்லம் சேர்த்து அரைக்கப் தண்ணீர் ஊற்றி குழையாதவாறு வேக வைக்கவும்.
அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.
வாணலியில் ரெண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
பின்னர் அரைத்த விழுதை சேர்த்து இரண்டு காெதிகள் வந்ததும் அந்த பாகற்காயை சேர்க்கவும்.
மேலும் இரண்டு காெதிகள் வந்ததும் மல்லித்தலையை தூவி இறக்கி நன்றாக கலந்து விட்டு பரிமாறவும்.
குறிப்பு
ஆந்திரா ஸ்பெஷலான இந்த மசாலாவை சாதத்தில் போட்டு சாப்பிடலாம்.
சப்பாத்திக்கும் தொட்டுக் கொள்ளலாம்.