டைகர் கிரிஸ்பி ஃப்ரான்

kuttybabuPPT
0
டைகர் கிரிஸ்பி ஃப்ரான்
தேவையானவை

 இறால் - அரை கிலோ 

முட்டை - ஒன்னு 

வெங்காயம் - ஒன்னு 

இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி

 மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி

 மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி 

சோயா சாஸ் - ஒரு தேக்கரண்டி

 கார்ன் பிளார் - 2  தேக்கரண்டி 

பிரட் கிரம்ஸ் - ஒரு கப் 

பச்சை மிளகாய் - இரண்டு 

மல்லித்தழை - கையளவு 

உப்பு - தேவையான அளவு 

எண்ணெய் - தேவையான அளவு

 செய்முறை 

சுத்தம் செய்த இறாலை உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும் .

பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து மை போன்று அரைத்துக் கொள்ள வேண்டும்.

 ஒரு பாத்திரத்தில் இறாலை சேர்த்து அதில் சோயா சாஸ், உப்பு , மிளகு தூள், அரைத்த வெங்காய விழுது ஆகியவற்றை சேர்த்து நன்றாக புரட்டிக் கொள்ள வேண்டும்.

 ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதை பிரான் கலவையில் சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும் .

பின்னர் கான்ஃப்ளாரை பாதி அளவு பிரட் கிரம்ஸ் சேர்த்து மீண்டும் நன்றாக புரட்டிக் கொள்ள வேண்டும் .

தயார் செய்து வைத்துள்ள இறாலை மீதமுள்ள சேர்த்து பிரட்டி எடுத்து அதனை சுமார் அரை மணி நேரம் வரை ஃப்ரிட்ஜில் வைத்து விட வேண்டும்.

 பின்னர் அடுப்பில் ஒரு வாணலை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடான பின் பிரிட்ஜில் உள்ள பிரானை எடுத்து ஒவ்வொன்றாக போட்டு சிம்மில் வைத்து பிரானை பொறித்து வடிகட்டி தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
 இறுதியாக பொரித்த இறால் மீது நறுக்கி வைத்துள்ள மல்லி தலையை தூவினால் டைகர் கிரிஸ்பி பிரான் தயார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)