பருப்பு வேக வைக்கும் போது தீர்ந்து போனால் அதை வேறு பாத்திரத்தில் எடுத்து போட்டு அதனுடன் இரு வெற்றிலை போட்டு ஒரு கொதி விட்டு இறக்கினால் தீர்ந்த வாசனை போய்விடும் .
துவையலுக்கு பருப்பு போடுகிறீர்களா? அதற்கு முன் துளி எண்ணெய் விட்டு கடுகு போட்டு வெடித்த பின் பருப்பை சேர்த்து வறுத்தால் உங்கள் துவையல் ருசியும், மனமும் பெறும்.
புழுங்கல் அரிசி உடன் இரண்டு பங்கு பச்சரிசி சேர்த்து மாவு அரைத்து புட்டு செய்தால் மிருதுவான புட்டு கிடைக்கும்.
எலுமிச்சம் பழம் தோல் காய்ந்து கடினமாக இருந்தால் வெந்நீரில் ஒரு நிமிடம் போட்டு எடுத்து சாறு பிழியுங்கள். சுலபமாகவும், அதிகமாகவும் சாறு கிடைக்கும்.
உப்புமா செய்ய சில ஆலோசனைகள்:
நீர் கொதிக்கும் போது அதில் ஒரு ஸ்பூன் நெய் கலந்தால் உப்புமாவின் சுவையும், மனமும் கூடும் .
உப்புமா செய்து இறக்கும் முன் அதில் மோர் எலுமிச்சை சாறு அல்லது மாங்காய் பொடி சேர்த்து விட்டால் சுவை அபாரமாக இருக்கும் .
உப்புமாவை இரண்டு பிரட் துண்டுகளுக்கு இடையில் வைத்து டோஸ்ட் செய்தால் சுவையான உப்மா சாண்ட்விச் ஆகிவிடும்.
ரவை உப்புமாவை போலவே கோதுமை ரவை, அரிசி குருணை, ஓட்ஸ், அவல் அல்லது பிரட்டில் உப்புமா செய்யலாம். கெட்டியாக இருக்கும் .
வெல்லத்தை கேரட் துருவியில் உள்ள பெரிய துளைகளில் துருவினால் பூவாக உதிர்ந்து விடும் .
ப்ரோன் பிரட்டை நீளமாக வெட்டி நெய்யில் பொரித்து உடனே பிடித்து சர்க்கரையில் புரட்டினால் குழந்தைகள் விரும்பி உண்ணும் திடீர் ஸ்வீட் தயார்.
கூழ் வற்றலை வேர்க்கடலை வறுப்பது போல வெறும் சட்டியை காய வைத்து அதில் போட்டு வறுக்கலாம் .
எண்ணெய் சேர்க்காதவர்கள் இந்த முறையில் வற்றல் வறுத்து சாப்பிடலாம்.
குழம்பு பொரியல் கூட்டு எதுவானாலும் உப்பு அதிகமாகிவிட்டால் கவலை வேண்டாம் .கொஞ்சம் தேங்காய் துருவலுடன் சிறிது சீரகம் சேர்த்து அரைத்து சேர்த்து விட்டால் அதிகப்படியான உப்பு சரியாகிவிடும்.
ஆமை வடைக்கு அரைக்கும் போது மாவில் தண்ணீர் சேர்க்காமல் அரைத்து வடை தட்டினால் எண்ணெய் குடிக்காது.
ரவை சேர்த்து ஆமை வடித்தட்டினால் நல்ல மொறு மொறுவென இருக்கும்.
வேப்பம்பூ ரசம் வைக்கும் போது புளி, உப்பு, மிளகாய் பொடி, பெருங்காயம் சேர்த்து கொதிக்க வைத்த பிறகு இறக்கும் போது வேப்பம்பூ, கடுகு, மிளகாயை எண்ணெயில் வறுத்து போட்டு மூடி வைக்கவும்.
ரசம் கசக்காமல் இருக்கும் வாழைப்பூ அல்லது வாழைத்தண்டு நறுக்கினால் அரிவாள் மனை கருப்பாகும்.
இதனை போக்க சிறிது புளியை வைத்து தேய்த்தால் எளிதாக கருப்பு நீங்கும் .
ஜவ்வரிசி வடகம் செய்யும்போது கான்ஃப்ளக்ஸை கொட்டி கலந்து பிழிந்து காய்ந்ததும் பொறிக்கலாம். நன்றாக இருக்கும்.
டோஃபுவை உபயோகிக்கும் முன் அதை லேசாக எண்ணையில் பொரித்து போட்டால் மனமும் சுவையும் அதிகரிக்கும் .
அரிசி உப்புமாவிற்கு அரிசியை காயவைத்து குடிப்பதற்கு முன் சற்று துவரம் பருப்புடன் வறுத்து பொடிக்க வாசனையாக இருப்பதுடன் சுவையாகவும் இருக்கும்.
சேப்பங்கிழங்கை ரோஸ்ட் செய்ய கிழங்கு வெந்ததும் மசாலாத்தூள், உப்பு, பெருங்காயம், சீரகத்தூள் இதனுடன் ரவை மாவு அல்லது பொட்டுக்கடலை மாவு ஒரு டேபிள் ஸ்பூன் தூவி பிசிறிய பின் வருக்க விரைவில் ரோஸ்ட் ஆவதுடன் கிழங்கில் மசாலா ஒட்டி எண்ணெயில் பிரியாமல் இருக்கும்.