கேரட் கீர்

kuttybabuPPT
0
கேரட் கீர்

தேவையானவை

கேரட் - 1/4 கிலோ

 பால் - அரை லிட்டர்

 சர்க்கரை - 200 கிராம் 

ரோஸ் எசன்ஸ் - கால் டீஸ்பூன் 

முந்திரி - பதினைந்து

 நெய் - இரண்டு டீஸ்பூன்

 செய்முறை 

பாலை காய்ச்சி ஆற வைத்துக் கொள்ளவும் .

முந்திரியை நெய்யில் வறுத்துக் கொள்ளவும்.

 கேரட்டை தோல் சீவி பெரிய துண்டுகளாக நறுக்கி குக்கரில் வேகவைத்து அதன் தண்ணீரை வடித்து தனியே எடுத்து வைக்கவும்.

 கேரட் ஆறியதும் வடித்து தண்ணீருடன் சேர்த்து மிக்ஸியில் மையாக அரைக்கவும்.

 அடுப்பில் கனமான அடி பகுதி உள்ள பாத்திரத்தை வைத்து அரைத்த கேரட் விழுதை சேர்க்கவும்.

 இத்துடன் சர்க்கரை சேர்த்து கரையும் வரை நன்றாக கிளறி விடவும் .

பிறகு காய்ச்சிய பால், ரோஸ், எஸ்.எம்.சி சேர்த்து கலக்கி முந்திரி சேர்த்து இறக்கவும் .
இதை சூடாகவோ அல்லது பிரிட்ஜில் வைத்து சில் என்றோ பரிமாறவும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)