பாசிப்பருப்பு கோதுமை மாவு ஸ்டஃப்டு பரோட்டா

kuttybabuPPT
0
பாசிப்பருப்பு கோதுமை மாவு ஸ்டஃப்டு பரோட்டா

தேவையானவை 

கோதுமை மாவு - அரை கிலோ

 பாசிப்பருப்பு - நூறு கிராம்

 தேங்காய் பால்   300 மில்லி 

கரம் மசாலா - ஒரு டேபிள் ஸ்பூன்

 மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

 மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன்

 வெண்ணெய் - தேவையான அளவு

 உப்பு - தேவையான அளவு

 செய்முறை 

தேங்காய் பாலில் உப்பு, கோதுமை மாவை சேர்த்து தளர்வாக பிசைந்து கொள்ளவும்.

 பாசிப்பருப்பை வேகவைத்து அதில் கரம் மசாலா, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

 கோதுமை மாவை உருண்டையாக உருட்டி சப்பாத்தியை விட தனமாக தேய்த்து பாசிப்பருப்பை சிறிது எடுத்து நடுவில் வைத்து சுருட்டி மீண்டும் தேய்த்துக் கொள்ளவும்.

 இதே போல் அனைத்து மாவையும் தேய்த்துக் கொள்ளவும்.
 பிறகு அடுப்பில் தோசை கல் வைத்து தைத்து வைத்த பரோட்டாவை போட்டு அதற்கு மேல் வெண்ணை தடவி திருப்பி போட்டு மீண்டும் என்னை தடவி வெந்ததும் எடுக்கவும் சுவையான மிருதுவான பாசிப்பருப்பு கோதுமை மாவு பரோட்டா தயார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)