நண்டு ரசம்

kuttybabuPPT
0
நண்டு ரசம் 

தேவையான பொருட்கள்

நண்டு - ஒரு கிலோ 

தக்காளி - மூணு 

கருவேப்பிலை - சிறிது 

மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன் 

கடுகு - ஒரு டீஸ்பூன்

 உளுந்தம் பருப்பு - இரண்டு டீஸ்பூன்

 பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்

 சோம்பு - கால் டீஸ்பூன்

 நல்லெண்ணெய் - ரெண்டு டேபிள்  ஸ்பூன் 

புளிக்கரைசல் - கால் கப் 

தண்ணீர் - 4 கப்

 கொத்தமல்லி - சிறிதளவு

 உப்பு - தேவையான அளவு

 செய்முறை 

முதலில் எடுத்து வைத்திருக்கின்ற தக்காளியை அரைத்துக் கொள்ளவும்.

 பின்பு கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

 ஒரு வாணிலையில் சுத்தம் செய்த நண்டுடன் உப்பு, மஞ்சள் தூள் மற்றும் நான்கு கப் தண்ணீர் சேர்த்து வேக விடவும்.

 அடிகனமான மற்றொரு வாணிலையை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, சோம்பு, பெருங்காயத்தூள், கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

 அடுத்து நண்டு ரசத்திற்கு என்று தனியாக தயார் செய்த ரசப்பொடி சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

 அடுத்து அரைத்த தக்காளி விழுதை சேர்த்து எண்ணெயில் பிரிந்து வரும் வரை வதக்கவும்.

 பிறகு புளிக்கரைசலை ஊற்றி கொதிக்க விடவும்.
 பிறகு வேக வைத்த நண்டு மற்றும் தண்ணீர் சேர்த்து கலக்கி இறக்கினால் நண்டு ரசம் தயார்.


Post a Comment

0Comments
Post a Comment (0)