தேவையானவை
ரவை - ஒரு கிண்ணம்
தேங்காய் பால் - ரெண்டு கிண்ணம்
பெரிய வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
புதினா இலைகள் - 10
மல்லித்தலை - சிறிது
எலுமிச்சை பழச்சாறு - இரண்டு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
நெய் - இரண்டு தேக்கரண்டி
தாளிக்க
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா ஒன்னு
எண்ணெய் - ரெண்டுமேசை கரண்டி
செய்முறை
முதலில் நெய்யை காய வைத்து ரவையை வறுத்து தனியே வைத்துக் கொள்ளுங்கள்.
வெங்காயத்தை நீளவாக்கில் மெலிதாக நறுக்கங்கள்.
பச்சை மிளகாயை கீறி கொள்ளுங்கள்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், தாளித்து நறுக்கிய வெங்காயம், கீரிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்குங்கள்.
பின்னர் தேங்காய் பாலை ஊற்றி அத்துடன் ஒரு கிண்ணம் தண்ணீரையும், தேவையான உப்பையும் சேர்த்து கலக்குங்கள்.
தேங்காய்ப்பால் நன்கு கொதிக்கும் போது வறுத்து வைத்துள்ள ரவை, எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து இரண்டு நிமிடம் கிளறி மூடி வைத்துவிட்டு தீயை குறையுங்கள்.
பத்து நிமிடம் நன்கு வேக விட்டு இறக்குங்கள்.