கொண்டைக்கடலை தோசை

kuttybabuPPT
0
கொண்டைக்கடலை தோசை

தேவையானவை 

கொண்டைக்கடலை - ஒரு கப் 

பச்சரிசி - அரை கப் 

அவல் - அரைக் கப் 

துருவிய தேங்காய் - அரை கப் 

சிகப்பு மிளகாய் - ஐந்து 

கருவேப்பிலை - சிறிதளவு

 உப்பு - தேவைக்கு ஏற்ப

 செய்முறை

கொண்டை கடலையை கழுவி தண்ணீரில் ஆறு முதல் ஏழு மணி நேரம் ஊற வைக்கவும்.

 அரிசி மற்றும் அவலை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

 6 மணி நேரம் கழித்து கொண்டைக்கடலையிலிருந்து தண்ணீரை வடிகட்டி அதனுடன் அரிசி மற்றும் அவல், சிவப்பு மிளகாய், தேங்காய் துருவல், கருவேப்பிலை மற்றும் உப்பு சேர்த்து எல்லாவற்றையும் நன்றாகவும் மிருதுவாகவும் தோசை மாவு பதத்தில் அரைக்கவும்.

 இரண்டு மணி நேரம் வைத்தால் மாவு புளித்து விடும்.
 அதன் பிறகு மெல்லிய தோசையாக சுட்டு சட்னியுடன் பரிமாறவும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)