தேவையானவை
கடலைப்பருப்பு - 250 கிராம்
மாங்காய் - 1
பச்சை மிளகாய் - 3
தேங்காய் துருவல் - அரை கிண்ணம்
மஞ்சள் பொடி - இரண்டு தேக்கரண்டி
சர்க்கரை - மூன்று தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
உப்பு, எண்ணை - தேவையான அளவு
கருவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை
கடலைப்பருப்பை முதல் நாள் இரவு தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.
மறுநாள் காலையில் பருப்பை களைந்து எடுத்து அரை கிண்ணம் பருப்பை தனியாக வைத்துக் கொண்டு மீதி உள்ள பருப்பை அரைப்பதமாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
மாங்காய் தோல் சீவி, பச்சை மிளகாயும், மாங்காயும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும் .
அரைத்த கடலைப்பருப்பு தனியாக எடுத்து வைத்த அரை கிண்ணம் கடலைப்பருப்பு, பொடியாக நறுக்கிய மாங்காய், பச்சை மிளகாய், கொத்தமல்லி, தேங்காய் துருவல், மஞ்சள் பொடி, சர்க்கரை, உப்பு எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் கடுகு, கருவேப்பிலை, சீரகம் ஆகியவற்றை தாளித்த கலவையை சேர்த்து இரண்டு நிமிடம் கிளறி இறக்க வேண்டும்.