தேவையானவை
புழுங்கல் அரிசி - 250 கிராம்
கெட்டி அவல் - 100 கிராம்
பார்லி - ஒரு கரண்டி
இஞ்சி - ஒரு துண்டு
மிளகாய் வற்றல் - நான்கு
மிளகு - பத்து
வெங்காயம் - 100 கிராம்
உப்பு எண்ணை - தேவையான அளவு
செய்முறை
அரிசியை பார்லி அவலை தனித்தனியாக தண்ணீர் விட்டு ஊற வைக்க வேண்டும்.
ஊறியதும் உப்பு நறுக்கிய இஞ்சி, மிளகு, மிளகாய் வற்றல் எல்லாவற்றையும் போட்டு சேர்த்து கரகரப்பாக அரைக்க வேண்டும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கி அரைத்த மாவில் சேர்த்து கலக்க வேண்டும்.
அடுப்பில் அடை கல்லை போட்டு காய்ந்ததும் ஒரு கரண்டி மாவை பரவலாக ஊற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பிப்போட்டு வெக வைத்து எடுக்க வேண்டும் .
அடை மொறுமொறுவென கமகமகன மனத்துடன் இருக்கும்.