தேவையானவை
வெள்ளரி விதை - 200 கிராம்
ஏலக்காய் - 5
குங்குமப்பூ - சிறிதளவு
பால் - 500 மில்லி
அரிசி மாவு - 2 தேக்கரண்டி
சர்க்கரை - 250 கிராம்
சாரை பருப்பு - நான்கு
பாதாம் பருப்பு - நான்கு
முந்திரி பருப்பு - ஐந்து
திராட்சை - நான்கு
பச்சை கற்பூரம் - சிறிதளவு
நெய் - 25 கிராம்
செய்முறை
பாதாம் பருப்பு தோலை உரிக்க வேண்டும் .
வெள்ளரி விதையை கழுவி பாதாம் பருப்போடு சேர்த்து சிறிது சிறிதாக பாலை விட்டு விழுதாக அரைக்க வேண்டும் .
தேவையான தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும்.
பிறகு பாலை விட்டு கொதிக்க வைத்து சர்க்கரையை போட்டு கரைய விட வேண்டும்.
குங்குமப்பூவையும், அரசி மாவையும் கரைத்து விட்டு ஏலக்காய் பொடி, பச்சை கற்பூரம் சேர்க்க வேண்டும்.
வாணலியில் நெய் விட்டு அடுப்பில் வைத்து காய்ந்ததும் முந்திரி பருப்பு, சாரைப்பருப்பு, திராட்சை வறுத்து போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்க வேண்டும்.