தேவையானவை
குடை மிளகாய் - ஒன்று
சிவப்பு பரங்கி கீற்று - ஒன்று
அவரைக்காய் - 4
கத்தரிக்காய் - 2
உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய், முருங்கைக்காய் - தலா ஒன்னு
சாம்பார் பொடி - 4 டீஸ்பூன்
துவரம்பருப்பு - 100 கிராம்
தனியா, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - ஒன்று
புளி - ஒரு எலுமிச்சம்பழ அளவு
தேங்காய் துருவல் - ஒரு கப்
கடுகு ,வெந்தயம் - தலா அரை டீஸ்பூன்
கருவேப்பிலை, பெருங்காயத்தூள் - சிறிதளவு
எண்ணெய், உப்பு - சிறிது
செய்முறை
எல்லா காய்களையும் பெரிய துண்டுகளாக நறுகவும்.
பச்சை மிளகாயை கீறி கொள்ளவும்.
துவரம் பருப்பை குறைவாக வேக வைக்கவும்.
தனியா, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் சிறிதளவு, எண்ணெய் விட்டு வறுத்து தேங்காய் துருவல் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு காய்களை வதக்கி புளி கரைசலை விட்டு சாம்பார் பொடி, உப்பு போட்டு கொதிக்க விடவும்.
வேகவைத்த துவரம் பருப்புடன் அரைத்து வைத்திருக்கும் விழுதை கலந்து கொதிக்கும் குழம்புடன் சேர்க்கவும் .
இதில் கடுகு, வெந்தயம் தாளித்துக் கொட்டி கருவேப்பிலை பெருங்காயத்தூள் சேர்த்து இறக்கவும்.