பாகற்காய் கார குழம்பு நல்லதை அனைவரிடமும் புலம்பு

kuttybabuPPT
0
பாகற்காய் கார குழம்பு
தேவையானவை

நீட்டு பாகற்காய் - இரண்டு

 உரித்த பூண்டு பற்கள் - 10 

உரித்து சின்ன வெங்காயம் - 15

 தக்காளி - ஒன்று 

நல்லெண்ணெய் - ஆறு டேபிள்ஸ்பூன்

 குழம்பு பொடி - நான்கு டேபிள் ஸ்பூன்

 புளிக்கரைசல் - ஒரு கப் 

மஞ்சள் தூள் - ஒரு டீஸ்பூன்

 துருவிய வெல்லம் - ரெண்டு டேபிள் ஸ்பூன்

 தேங்காய் துருவல் - 4 டேபிள் ஸ்பூன்

 உப்பு - தேவைக்கு 

தாளிக்க 

எண்ணெய் - நான்கு டேபிள்ஸ்பூன்

 கடுகு - ஒரு டீஸ்பூன் 

கருவேப்பிலை - ஆறு இதழ்கள் 

குழம்பு வடகம் - ஒன்று

 செய்முறை 

வாணலியில் ஆறு டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி மெல்லிய விலைகளாக நறுக்கிய பாகற்காயை சேர்த்து வதக்கவும்.

 பின்னர் உரித்த சின்ன வெங்காயம், பூண்டு பற்களை முழுமையாக சேர்த்து வதக்கி நறுக்கிய தக்காளி குழம்பு பொடியை சேர்த்து வதக்கவும் .

பின்னர் உப்பு, மஞ்சள் தூள், புளி கரைசல் சேர்த்து மேலும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி மூடி வைக்கவும்.

 இடையிடையே திறந்து கிளறி விடவும்.

 அனைத்தும் ஒன்று சேர்ந்து வந்ததும் வெல்லம், தேங்காய் துருவல் சேர்க்கவும்.

 பின்னர் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்துக் கொட்டி மறுபடியும் கிளறவும் வெந்ததும் எல்லாவற்றையும் நன்றாக கலந்து விட்டு அடுப்பில் இருந்து இறக்கவும்.

 குறிப்பு இந்த காரக்குழம்பை சூடான சாதத்தில் ஊற்றி பிசைந்து சாப்பிடலாம்.
 இட்லி, தோசை, உப்புமாவிற்கு தொட்டுக் கொள்ளலாம்.

Post a Comment

0Comments
Post a Comment (0)