தேவையானவை
அவரைக்காய் - 200 கிராம்
பாசிப்பருப்பு - 100 கிராம்
தேங்காய் துருவல் - ஒரு கப்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - ஒன்று
கடுகு - அரை டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
பாசிப்பருப்பை வெறும் வாணலியில் பொன்னிறமாக வறுத்து வேக வைக்கவும்.
அவரைக்காயுடன் உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
சீரகம், தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய் மூன்றையும் சிறிது தண்ணீர் விட்டு மிக்சியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
வேக வைத்த பருப்புடன் அரைத்த விழுதை கலந்து அவரைக்காய் சேர்த்து கொதிக்க விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு தாளித்து இறக்கவும்.