=> அதிரசத்திற்கு வெல்லத்தில் மாவை சேர்க்காமல் மாவை ஒரு பாத்திரத்தில் வைத்து சிறிது சிறிதாக கரண்டியால் வெல்லப்பாகை சேர்த்தால் வெல்லம் அதிகமாக ஆகி அதிரசம் கரைவதை தடுக்க முடியும்.
=>ஒரு கப் கடலை மாவு, தேங்காய் பால், சர்க்கரை என்று ஏழு கப் கேக்கிற்கு எடுத்துக் கொள்வோம். இத்துடன் ஒரு கப் முந்திரி, பாதாமையும் பொடித்து சேர்த்து தயாரித்தால் ஏழு கப் கேக் மிக சுவையாக இருக்கும்.
=> முறுக்கு செய்யும் போது நான்கு ஆழாக்கு கழுவி காயவைத்த பச்சரிசியுடன் இரண்டு ஆளாக்கு புழுங்கல் அரிசியை வறுத்து போட்டு மற்ற பருப்புகள் சேர்த்து அரைத்து பிழிந்து பாருங்கள் வித்தியாசமான சுவை கிடைக்கும்.
=> தேன் குழல் செய்ய மாவு அரைக்கும் போது உருளைக்கிழங்கு வேகவைத்து அதனுடன் சேர்த்து அரைத்தால் தேன் குழல் மிக சுவையாக இருக்கும்.
=> தேன் குழல் சீடை போன்றவற்றுக்கான மாவை வெந்நீர் ஊற்று பிசைந்தால் எத்தனை நாள் ஆனாலும் நமக்கு போகாது.
=> தீபாவளி லேகியம் செய்ய முடியாவிட்டால் அதற்கு ஈடான ஒரு லேகியம் செய்ய ஒரு ஸ்பூன் ஓமம், ஒரு ஸ்பூன் சுக்குப்பொடி, வெல்லப்பொடி சேர்த்து தேன் கலந்து சிறு உருண்டைகளாக உருட்டி சாப்பிடலாம்.
=> சர்க்கரை, வெல்லம் போன்றவைகளில் பாகு எடுக்கும் போது சிறிதளவு சுடுநீர் சேர்க்கவும்.
=> தட்டை, சில இடங்களில் முறுமுறுப்பாகவும் சில இடங்களில் சவுக்கு சவுக்கு எனவும் இருக்கிறதா? தட்டையின் நடுவில் சிறு சிறு துளிகள் செய்து பிறகு எண்ணெயில் பொரித்தால் சூப்பராக இருக்கும்.
=> குலோப்ஜாம், லட்டு, பூந்தி, ஜிலேபி போன்றவற்றை மட்டும் தான் சூடான பாகில் போட வேண்டும். அப்போதுதான் ஜீரா பலகாரங்கள் முழுக்க பரவி இருக்கும். இனிப்பு பலகாரங்கள் செய்யும் போது பாகுவின் பதம் மிகவும் முக்கியம். பாகு சரியான பதம் வரும்போது அடுப்பை சிம்மில் வைத்து விட வேண்டும். இல்லாவிடில் பதம் முறிந்து விடும்.
=> ரவா லட்டு, பொட்டுக்கடலை மாவு, லட்டு ஆகியவை செய்யும் போது மாவு சர்க்கரை கலவைக்கு கால் பங்கு பால் பவுடரை கலந்து செய்தால் சுவை கூடுதலாக இருக்கும்.