பூசணி கோவா பாயாசம் சாப்பிட்டு பாருங்க விஸ்வாசம்

kuttybabuPPT
0
பூசணி கோவா பாயாசம்
தேவையானவை 

அரிந்த பூசணி துண்டுகள் - இரண்டு கப்

 பால் - ஒரு கப்

 பால்கோவா - 100 கிராம் 

ஏல பொடி - ஒரு சிட்டிகை 

பாதாம் பருப்பு - 10 

முந்திரிப் பருப்பு - ஆறு 

லெமன் ஃபுட் கலர் - ஒரு சிட்டிகை

 சர்க்கரை - அரை கப் 

செய்முறை 

பூசணி தூண்டுகளை அளவாக நீர் விட்டு வேக விடவும் .

வெந்ததும் பால்கோவாவை உதிர்த்து சேர்த்து இரண்டையும் மிக்ஸியில் அரைக்கவும்.

 பாதாம், முந்திரி இரண்டையும் அரைமணி நேரம் ஊற வைத்து தனியாக அரைத்து வைக்கவும்.

 பாலை அடிகனமான பாத்திரத்தில் ஊற்றி சர்க்கரை சேர்த்து காெதித்ததும் அரைத்த பாதாம் முந்திரி விழுதை சேர்க்கவும் .

ஒரு கொதி வந்ததும் அரைத்து வைத்துள்ள பூசணி, கோவா விழுதை சேர்த்து ஒரு கப் நீர் விட்டு எல்லாமாக சேர்ந்து கொதித்து வரும் போது ஃபுட் கலர் ,ஏல பொடி சேர்த்து இறக்கவும்.
 சத்தான வித்தியாசமான சுவையான பூசணி கோவா பாயாசம் தயார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)