தீபாவளி லேகியம் சாப்பிட்டா பாக்கியம்

kuttybabuPPT
0
தீபாவளி லேகியம் 
தேவையானவை 

அரிசி திப்பிலி - 2 டேபிள் ஸ்பூன் 

சுக்கு - 10 சிறு துண்டு 

மிளகு - ஒரு டேபிள் ஸ்பூன் 

ஓமம் - ஒரு டேபிள் ஸ்பூன் 

கிராம்பு - ஆறு

 தனியா - ஒரு டீஸ்பூன் 

விரலி மஞ்சள் - ஒன்று 

வெல்லத்துருவல் - ஒரு கப்

 நல்லெண்ணெய் - ரெண்டு டேபிள் ஸ்பூன்

 நெய் - அஞ்சு டேபிள் ஸ்பூன் 

ஏலக்காய் - 3

 சித்தரத்தை - ஒரு சிறிய துண்டு

 செய்முறை

வெல்லம், வெண்ணெய் தவிர மற்றவற்றை தனித்தனியாக மிக்ஸியில் பொடிக்கவும்.

 தண்ணீரில் வெல்லத்தைச் சேர்த்து அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்தவுடன் அரைத்த பொடியை சேர்த்து சிம்மில் வைத்து கிளறவும்.

 மூன்று நிமிடம் கிளறி பின் எண்ணெய், நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறவும் .

அது கெட்டியாகி ஓரத்தில் எண்ணை பிரிந்து பாகு பல பல ஆக வரும்போது லேகிய பதத்துக்கு சுருண்டு வரும்போது அடுப்பில் இருந்து இறக்கவும் .
தீபாவளி பலகாரம் சாப்பிடுவதால் அஜீரணம் வராமலும், இருமல், சளி தொல்லை ஏற்படாமலும் இருக்கவும் உதவி புரியும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)