தீபாவளி பலகாரத்த இப்படி ரெடி பண்ணுங்க........

kuttybabuPPT
0
தீபாவளி பலகார டிப்ஸ்

1. இனிப்புகள் செய்யும்போது ஒரு சிட்டிகை பச்சை கற்பூரம் சேர்த்தால் அவை நல்ல வாசனையுடன் இருக்கும். அதிகமாகிவிட்டால் சாப்பிட முடியாது.

 2. பாதுஷா மாவில் ஒரு சிட்டிகை சமையல் சோடா உடன் சிறிதளவு டால்டாவையும் சூடு செய்து சேர்த்து பிசைந்தால் பாதுஷா மிருதுவாக இருக்கும். பாதுஷா செய்த பின் அதன் மீது பூஸ்ட் அல்லது போன்விட்டாவை திக்காக கரைத்து ஆங்காங்கே கைகளால் தெளித்தால் வித்தியாசமான சேபியில் பாதுஷா ரெடி.

3. பர்பி செய்து தட்டில் கொட்டியவுடன் அதன்மேல் நெய்யில் வறுத்த முந்திரி அல்லது வேர்கடலையை போட்டு லேசாக அழுத்தி விட்டால் பார்க்க அழகாக இருப்பதோடு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

4. ஜாங்கிரி செய்வதற்கு உளுந்தை கிரைண்டரில் அரைப்பதை விட ஆட்டுக்கல்லில் அரைத்தால் நல்லது.

5. மைசூர் பாகை வெறும் நெய் மட்டும் சேர்த்து செய்யாமல் சிறிதளவு ரீபைண்ட் ஆயில் சேர்த்து செய்யவும். மைசூர் பாகு நன்கு பூத்து வரும்.

6. இனிப்பு பட்சணங்களுக்கு பாகு வைக்கும் போது நான்ஸ்டிக் பேனை பயன்படுத்துவதை விட அடி கனமான பாத்திரத்தை உபயோகிக்கலாம். பாகுபதம் சரியாக இருக்கும் சர்க்கரை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும் அப்போதுதான் பாகு நன்றாக வரும் .

7. தேங்காய் பர்பி செய்யும் போது துருவிய தேங்காயை அப்படியே சர்க்கரைப்பாகில் சேர்க்காமல் துருவலுடன் அரை டம்ளர் பால், ஐந்தாறு முந்திரி பருப்பு வைத்து அரைத்து சேர்க்கவும். இப்படி கிளறினால் தேங்காய் திப்பியாக இல்லாமல் சேர்ந்து வந்து பர்பி மென்மையாக இருக்கும்.

6. லட்டு, அல்வா, பாதுஷா முதலிய இனிப்பு வகைகள் செய்யும்போது ஜீரா இனிப்புகளில் பூக்காமல் இருக்க வேண்டுமா? பாகு வைக்கும் போதே அரை மூடி எலுமிச்சம் பழம் பிழிந்து விடவும்.

7. ரவா லட்டு பிடிப்பவர்கள் வெறும் வாணிலியில் ரவையை வறுத்து அரைக்கவும். அதே அளவு சர்க்கரையை எடுத்தரைக்கவும். இரண்டையும் தனித்தனியே மாவாக அரைத்து பிடித்தால் சூப்பர் சுவையாக இருக்கும்.

8. முற்றிய தேங்காய் துருவல், எள், கசகசாவை தனித்தனியே வறுத்து பொடித்த சர்க்கரை உடன் கலந்து பூரணம் தயாரித்தால் சோமாஸ் சுவையாக இருக்கும் .

9. எந்தவிதமான காரமாக இருந்தாலும் பிசையும் மாவுடன் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணையை கலந்து செய்யவும். வெண்ணை சேர்க்காமலேயே பட்சனம் உள்ளே மெருதுவாக, வெளியே கரகரப்பாகவும் வரும். வாயில் போட்டால் கரையும் படி மென்மையாக இருக்கும்.

10. கார வகைகளுக்கு மாவு அரைக்கும் போது மாவில் நேரடியாக உப்பு கலப்பதை விட உப்பு தண்ணீரில் கரைத்து கலந்தால் எண்ணெயில் போட்டதும் வெடிக்காமல் இருக்கும். உப்புத்தட்டு திட்டாக இல்லாமல் நன்றாக கரைந்து இருக்கும் .

11. தேன் குழல் செய்யும்போது ஒவ்வொரு ஈட்டுக்கும் மாவு பிரஷ்ஷாக பிசைந்து செய்தால் கடைசி வரை வெளுப்பாக வரும்.

12. முறுக்கு சீடை செய்யும் போது தூள் உப்பு போடாமல் கல் உப்பை தண்ணீரில் ஊற வைத்து அதனை மாவில் ஊற்றி பிசைந்து பட்சணங்கள் செய்தால் வெடிக்காது .

13. சீடை, தேன்குழல் போன்றவை செய்வதற்கு தேவையான அரிசியை அரை மணி நேரம் வெண்ணீரில் ஊற வைத்து வடித்த பின் மாவாக அரைக்கலாம்.பட்சணங்கள் சிவக்காமல் வரும் .எண்ணெயில் போடும் பிரச்சனைகள் நன்றாக மூழ்கி இருக்கும் அளவுக்கு வாணலியில் எண்ணெய் வைக்க வேண்டும்.

14. முறுக்கு, சீடை, தேன்குழல் செய்யும்போது அரிசி உளுந்து மாவுடன் சிறிது ஜவ்வரிசியை வெறும் வாணலியில் வறுத்து பொடி செய்து சேர்க்கலாம் .மொறுமொறுவென ருசி கூடுதலாக இருக்கும் .

15. ஏலக்காய் விதைகளை மாவில் சேர்த்து அரைத்து செய்தால் சுவையும், வாசனையும் பிரமாதமாக இருக்கும்.

16.  தேன்குழல், ரிப்பன், ஓமப்பொடி என பிழியும்போது மாவு வைக்கும் முறுக்கு குழாயின் உட்புறத்திலும் அழுத்திப் பிழியும் மேல் குழாயின் வெளிப்புறத்திலும் எண்ணெய் தடவிய பிறகு மாவை போட்டு பிழிந்தால் குழாயில் மாவு அதிகம் ஒட்டாது.

17. தேன் குழலுக்கு மாவு பிசையும் போது தண்ணீர் விட்டு பிசையாமல் தேங்காய் பால் சேர்த்து பிசைந்து சுடுங்கள். தேன் குழல் வெள்ளை வெளேர் நிறத்தில் இருக்கும். சுவையாக இருக்கும்.

18. ரிப்பன் பக்கோடா செய்யும் போது அரிசி மாவு, கடலை மாவோடு இரண்டு டேபிள் ஸ்பூன் கோதுமை மாவு கலந்து பிசைந்து பிழிந்து பாருங்கள் பக்கோடா கூடு கூடாக வருவதுடன் சுவையாகவும் பிரமாதமாகவும் இருக்கும் .

19. மிக்சருக்கு மாவு கரைக்கும் போது மிளகாய்த்தூளுடன் சிறிது மிளகுத்தூளும் சேர்த்தால் சுவையும் மனமும் வித்தியாசமாக இருக்கும்.
 வயிற்றுக்கும் நல்லது.

20. பொரித்து மிக்ஸரை வடித்தட்டில் கொட்டி ஆறவிட்டதும் டிஷ்யூ பேப்பரில் போட்டு எண்ணெய் பசை பாேனாவுடன் பாலித்தீன் கவரில் போட்டு வைத்தால் மிக்சரில் நீண்ட நாட்கள் வரை எண்ணெய் கமறமல் வராமல் இருக்கும்.

21. லட்டு பிடிக்க பொரித்து வைத்த பூந்தி அதிகமாக இருந்தால் மிளகுப் பொடி, உப்பு தூவி, கடுகு, கருவேப்பிலையை போட்டு தாலித்தால் காரசார காராபுந்தி ரெடி .

22. மைதா மாவை ஒரு மெல்லிய துணியில் சிறிய மூட்டையாக கட்டி ஆவியில் வேக வைக்கவும். ஆறியதும் உதிர்த்து உப்பு, ஓமம் அல்லது சீரகம் சேர்த்து பிசைந்து சீடை செய்தால் வாயில் போட்டதும் கரையும்.

23. சீடைக்கு மாவு பிசைந்ததும் அதை சிறிது நேரம் ஊற விடவும். அதன் பிறகு சிறிது சிறிதாக உருட்டி ஒரு துணியில் பரப்பவும் .ஒரு மணி நேரம் அப்படியே வைத்திருந்தால் மாவில் இருக்கும் ஈரத்தை துணி உறிஞ்சிக் கொள்ளும். அதன் பிறகு சீடையை பொறித்தால் வெடிக்காமல் இருக்கும்.
24. தீபாவளி லேகியம் செய்ய நேரமில்லையா? ஒரு கைப்பிடி டைமண்ட் கற்கண்டுடன், மூன்று சுக்கு ஒரு டீஸ்பூன், மிளகு ஒரு டீஸ்பூன், சீரகம் இரண்டு, ஏலக்காய் சேர்த்து மிக்ஸியில் போட்டு பொடித்து வைத்துக் கொள்ளவும் . இந்த பவுடரை டீயில் போட்டு கொதிக்க வைத்து குடிக்கலாம்.

Post a Comment

0Comments
Post a Comment (0)