மரவள்ளி கிழங்கு ரோஸ்ட் நல்ல டேஸ்ட்

kuttybabuPPT
0
மரவள்ளி கிழங்கு ரோஸ்ட்
தேவையானவை 

மரவள்ளி கிழங்கு - அரை கிலோ

 பச்சரிசி -  கால் கிலோ

 தேங்காய் துருவல் - கால் கப்

 மிளகாய் - 1 

 பெரிய வெங்காயம் - 100 கிராம் 

மஞ்சள் பொடி - ஒரு டீஸ்பூன் 

இஞ்சி - சிறு துண்டு 

பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்

 கருவேப்பிலை, உப்பு, எண்ணெய் - தேவைக்கு ஏற்ப 

செய்முறை 

மரவள்ளிக்கிழங்கை தோல் உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

 பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து பின் அரிசி உடன் மரவள்ளிக்கிழங்கும், துருவிய தேங்காய், இஞ்சி, மிளகாய், வெங்காயம், பெருங்காயம், கருவேப்பிலை என எல்லாவற்றையும் கிரைண்டர்லையோ அல்லது ஆட்டுக்கல்லிலோ போட்டு அடைக்கு அரைப்பது போல் விழுதாக அரைத்து ஒரு பாத்திரத்தில் போட்டு மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கலக்கவும்.

 அடிப்பில் தோசை கல்லை வைத்து எண்ணெய் தடவி காயவைத்த பின் ஒரு கரண்டி மாவை விட்டு வேக விடவும்.

 அதில் சிறிது எண்ணெய் விட்டு திருப்பி போட்டு வெந்தவுடன் எடுக்கவும்.
 இந்த மரவள்ளி கிழங்கு ரோஸ்டுக்கு தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி நல்ல காம்பினேஷன்.

Post a Comment

0Comments
Post a Comment (0)