தேவையானவை
மொச்சைக்கொட்டை, வேர்க்கடலை - தலா கால் கப்
சர்க்கரைவள்ளி கிழங்கு - ரெண்டு
சேனைக்கிழங்கு - 100 கிராம்
புளி கரைசல் - 2 டம்ளர்
பரங்கிக்காய் - ஒரு துண்டு
உப்பு ,எண்ணெய் - தேவைக்கு
வெல்லம் - சிறிய நெல்லிக்காய் அளவு
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
வறுத்து பொடிக்க காய்ந்த மிளகாய் - 4
மிளகு - 2 டீஸ்பூன்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்
தனியா - மூன்று டீஸ்பூன்
தேங்காய் துருவல் - அரை கப்
தாளிக்க
கடுகு - ஒரு டீஸ்பூன்
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
நல்லெண்ணெய் - நான்கு டீஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
மல்லித்தழை - இரண்டு டீஸ்பூன்
செய்முறை
மொச்சைக்கொட்டை, வேர்க்கடலை இரண்டையும் மூன்று மணி நேரம் ஊற வைத்து உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு வறுக்க கொடுத்துள்ள பொருட்களை வறுத்து மிக்ஸியில் பொடித்து நீர் விட்டு சற்று கெட்டியாக அரைக்கவும்.
அடி கனமான பாத்திரத்தில் புளிக்கரைசலை ஊற்றி உப்பு , மஞ்சள் பொடி போட்டு காய்கறிகளை ஒரே அளவாக நறுக்கி போட்டு பாதி அளவு வெந்ததும் மொச்சை, கடலை இரண்டையும் சேர்க்கவும்.
எல்லாம் வெந்ததும் அரைத்த கலவையையும் சேர்த்து குழம்பு பதம் வந்ததும் வெல்லம் சேர்த்து இரண்டு கொதி வந்ததும் தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளித்து இறக்கவும்.
மல்லித்தழை தூவி அலங்கரிக்கவும்.