தேவையான பொருட்கள்
கடலை மாவு - அரைக்கப்
காய்ச்சிய பால் - அரை கப்
சர்க்கரை பாெடித்தது - முக்கால் கப்
ஏலக்காய் பொடி - கால் ஸ்பூன்
நெய் - நான்கு ஸ்பூன்
தேங்காய் துருவல் - இரண்டு ஸ்பூன்
உலர் திராட்சை அல்லது உடைத்த பாதாம் - இரண்டு ஸ்பூன்
செய்முறை
வாணலியில் ரெண்டு ஸ்பூன் நெய் விட்டு கடலை மாவு மற்றும் துருவிய தேங்காயை மிதமான தீயில் வறுக்கவும்.
வறுத்த கலவையுடன் காய்ச்சியப்பால் மற்றும் பாெடித்த சர்க்கரை பாதி சேர்த்து நன்கு பதமாக கிளறி அதனுடன் ஏலக்காய் பொடி மற்றும் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை கிளறி ஆற விடவும் .
பின் கையில் லேசாக மீதம் உள்ள நெயை தடவி சிறுசிறு உருண்டைகளாக இக்கலவையை உருட்டி தட்டையாக பேடா வடிவில் தட்டி சர்க்கரை பொடியில் பிரட்டி எடுத்து நடுவில் ஒரு சிறு குழி உண்டாக்கி அதில் உலர் திராட்சையோ அல்லது பாதாமையோ வைத்து பரிமாறவும்.
மிகுந்த சுவையான கடலை மாவு பேடா ரெடி செய்வதும் சுலபம்.