நெல்லிக்காய் பாத்

kuttybabuPPT
0
நெல்லிக்காய் பாத் 
தேவையானவை

பெரிய நெல்லிக்காய் - ஆறு

 துருவிய தேங்காய் - நான்கு டீஸ்பூன்

 உப்பு, எண்ணெய் - தேவைக்கு 

உதிர் உதிராக வடித்த சாதம் - ரெண்டு கப் 

தாளிக்க 

கடுகு - அரை டீஸ்பூன் 

வரமிளகாய் - 2

 பச்சை மிளகாய் - ஒன்று

 கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்

 உளுந்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்

 பெருங்காயம் - ஒரு சிட்டிகை

 கருவேப்பிலை - ஒரு கொத்து

 மல்லித்தழை - இரண்டு ஸ்பூன்

 செய்முறை 

நெல்லிக்காய் விதையை நீக்கி கேரட் துருவில் துருவிக் கொள்ளவும்.

 வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து நெல்லிக்காயை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும் .

தேங்காய் துருவலையும், உப்பையும் சேர்த்து வதக்கி இறக்கவும்.

 சாதத்தை இதில் போட்டு நன்றாக கிளறி விடவும்.

 மல்லி தலை தூவி அலங்கரிக்கவும்.

 சத்துள்ள இந்த நெல்லிக்காய் பாத் எல்லா நாளும் சாப்பிட ஏற்றது.
 பித்தம் நீக்கும் மருந்தாகவும் இருக்கிறது.

Post a Comment

0Comments
Post a Comment (0)