தேவையானவை
பச்சரிசி - ஒரு கப்
சர்க்கரை - ஒரு கப்
அரிந்த பைனாப்பில் துண்டுகள் - அரை கப்
நெய் - ஆறு டீஸ்பூன்
லெமன் ஃபுட் கலர் - ஒரு சிட்டிகை
ஏலக்காய் பொடி - ஒரு சிட்டிகை
முந்திரி - 10
பால் - ஒரு கப்
செய்முறை
வெறும் வாணலியில் அரிசியை வறுக்கவும் .
பைனாப்பிளை மிக்ஸியில் நைசாக அரைத்து வடிகட்டவும்.
வறுத்த அரிசியை நன்றாக கழுவி பால் ஒரு கப், பைனாப்பிள் சாறு ஒரு கப், தண்ணீர் ஒரு கப் சேர்த்து குலைய வேக விடவும்.
சர்க்கரையில் ஃபுட் கலர் ஏலப்பாெடி சிறிதளவு நீர் விட்டு கம்பி பாகு பதத்தில் காய்ச்சவும் .
வெந்த பொங்கலை இதில் சேர்த்து இடை இடையே நெய்விட்டு கிளறி இறக்கவும் .
மீதி உள்ள நெய்யில் முந்திரி பருப்பினை வறுத்து சேர்த்து நன்றாக கிளறவும்.
வித்தியாசமான இந்த பொங்கல் பண்டிகைகளில் செய்து அசத்த ஏற்றது.