தேவையானவை
வரகு அரிசி - அரை கப்
பெரிய நெல்லிக்காய் - 5
வர மிளகாய் - ஒன்று
பச்சை மிளகாய் - 2
தாளிக்க
கருவேப்பிலை - சிறிதளவு
கடுகு, உளுந்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
பெருங்காயம், மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
நல்லெண்ணெய், இந்துப்பு - தேவைக்கு ஏற்ப
செய்முறை
முதலில் வரகரிசியை 20 நிமிடம் ஊற வைத்து நன்கு கலைந்து கொள்ளவும்.
பின் ஒரு பானையில் இரண்டு கப் தண்ணீர் விட்டு நன்கு கொதி வந்ததும் வரகரிசியை அதில் சேர்த்து ஐந்து முதல் 8 நிமிடம் வரை வெக விடவும்.
வரகரிசி நன்கு வெந்ததும் அடுப்பை அணைத்து அதனை நன்கு வடித்து விடவும்.
இப்போது வரகு சாதம் தயார் .
இந்த வரகு சாதத்தினை ஒரு தட்டில் கெ கொட்டி கொள்ள வேண்டும்.
பெரிய நெல்லிக்காயை கழுவி கொட்டையை நீக்கிவிட்டு பொடியாக துருவி கொள்ள வேண்டும்.
அடுப்பில் வாணலியை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகை போட்டு வெடித்ததும், உளுந்தம் பருப்பு போட்டு வறுத்து சிவந்ததும், கருவேப்பிலை, வர மிளகாய், பச்சை மிளகாய், பெருங்காயம், மஞ்சள் பொடி போட்டு தாளிக்க வேண்டும் .
அதனுடன் துருவிய நெல்லிக்காயை போட்டு நன்கு கிளற வேண்டும்.
சிறிது நேரம் வதங்கியவுடன் அடுப்பில் இருந்து இறக்கி நெல்லிக்காய் கலவையை ஆற வைத்த வரகு சாதத்துடன் சேர்த்து கிளற வேண்டும்.