கலவை பருப்பு வாழைப்பூ உசிலி

kuttybabuPPT
0
கலவை பருப்பு வாழைப்பூ உசிலி
தேவையானவை 

துவரம் பருப்பு, கடலைப்பருப்பு தலா - 100 கிராம் 

உளுந்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்

 கொள்ளு - 4 டீஸ்பூன்

 வாழைப்பூ - ஒன்று 

காய்ந்த மிளகாய் - ஒன்று 

மஞ்சள் தூள் - ஒன்னு சிட்டிகை

 கடுகு, உளுந்தம் பருப்பு - தாளிக்க தலா அரை டீஸ்பூன்

 எண்ணெய் - 100 மில்லி

 உப்பு - சிறிது 

செய்முறை 

துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, கொள்ளு நான்கையும் ஒன்றாக சேர்த்து இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.

 பிறகு அதை கலைந்து வடிகட்டி காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து கெட்டியாக கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

 வாழைப்பூவை ஆய்ந்து நரம்பு நீக்கி பொடியாக நறுக்கி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேகவிடவும் .

வெந்ததும் ஒரு தட்டில் கொட்டி ஆறியவுடன் நன்கு பிழிந்து கொள்ளவும்.

 வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு தாளித்து அரைத்த பருப்பை சேர்த்து உதிரியாக வரும் வரை மிதமான தீயில் கிளறவும்.
 பருப்பு மொறுமொறுப்பாக ஆனவுடன் பிழிந்து வைத்து இருக்கும் வாழைப்பூ போட்டு கிளறி எல்லாம் ஒன்று சேர்ந்ததும் இறக்கவும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)