தேவையான பொருட்கள்
மட்டன் - கால் கிலோ
பச்சை பட்டாணி அல்லது காய்ந்த பட்டாணி - அரை கப்
உருளைக்கிழங்கு, தக்காளி - தலா ஒன்னு
சோம்பு - கால் கரண்டி
முந்திரி பருப்பு - ஐந்து பச்சை
மிளகாய் - 2
இஞ்சி - ஒரு துண்டு
கடல்பாசி - 2 கிராம்பு
பிரிஞ்சி இலை - தலா ஒன்னு
உப்பு - தேவைக்கு ஏற்ப
கொத்தமல்லி - சிறிது
செய்முறை
பச்சை பட்டாணியை வேக வைத்துக் கொள்ளவும்.
காய்ந்த பட்டாணியானால் 8 மணி நேரம் ஊற வைத்து வேக வைத்துக் கொள்ளவும்.
உருளைக்கிழங்கு வேக வைத்துக் கொள்ளவும்.
இஞ்சி, கடல் பாசி, சோம்பு, முந்திரி, பச்சை மிளகாய், தக்காளி ஆகியவற்றை சிறிது தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் சேர்த்து பிரிஞ்சி இலை, கிராம்பு சேர்த்து அரைத்த விழுதை சேர்த்து சிறிய தீயில் வைத்து வதக்கவும்.
வெந்த பட்டாணி மற்றும் உருளை துண்டுகளை போட்டு உப்பு சேர்க்கவும்.
தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஊற வைத்த மட்டனை போட்டு பத்து நிமிடங்கள் கொதிக்க விட்டு கொத்தமல்லி தூவி பரிமாறவும்.