தேவையானவை
காளான் - 200 கிராம்
ஸ்வீட் கான் - 100 கிராம்
பால் - ஒரு கிண்ணம்
கிரீம் - 50 கிராம்
சோள மாவு - ரெண்டுமேசை கரண்டி
பூண்டு - ஐந்து பல்
மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு
ஆலிவ் எண்ணெய் - ஒரு மேசை கரண்டி
செய்முறை
காளான் சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் ஆலிவ் எண்ணெய் சேர்த்து சூடானதும் பூண்டு போட்டு வதக்கவும்.
பிறகு காளான், பால், ஸ்வீட் கான், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து விடவும் .
சோளமாவை பாலில் கலக்கி கலவையில் சேர்க்கவும்.
இது கெட்டிப் பதத்துக்கு வந்ததும் கிரீம், மிளகுத்தூள், உப்பு சேர்த்து பரிமாறவும்.