பஞ்சாபி சிக்கன் மசாலா குழம்பு. சாப்பிட்டு கைய அலம்பு

kuttybabuPPT
0
பஞ்சாபி சிக்கன் மசாலா குழம்பு
சாப்பிட்டு கைய அலம்பு
தேவையான பொருட்கள் 

கட்டா செய்ய சிக்கன் - 500 கிராம்

 வெங்காயம் - 2 

இஞ்சி - சிறு துண்டு 

பூண்டு - ஒன்னு

 தக்காளி - ரெண்டு 

சீரகம் - ஒரு கரண்டி 

பட்டை இலவங்கம்  -தலா ரெண்டு

 மல்லித்தூள் - ரெண்டு கரண்டி

 மிளகாய்த்தூள் - ரெண்டு கரண்டி

 முந்திரி பருப்பு - 10 

தேங்காய் துருவல் - ஒரு கரண்டி

 வெண்ணெய் - கால் கப் 

தயிர் - அரை கப்

 சர்க்கரை - ஒரு கரண்டி 

புதினா, கொத்தமல்லி - சிறிது 

உப்பு - தேவைக்கு ஏற்ப 

செய்முறை 

வெங்காயம், தக்காளி, இஞ்சியை நறுக்கி கொள்ளவும்.

 முந்திரி பருப்பு அரைத்து சிறிதளவு உப்பு சேர்த்து சிக்கன் துண்டுகளோடு ஊற வைக்கவும்.

 தேங்காய் துருவலை தனியாக அரைக்கவும்.

 மிளகுத்தூள், மல்லி தூள், சீரகம் பாதி அளவு வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து நைசாக அரைக்கவும்.

 பூண்டை தனியாக அரைத்து  கலக்கவும்.

 குக்கரில் வெண்ணெய் விட்டு உருகியதும் சர்க்கரை சேர்த்து பட்டை லவங்கம் தாளித்து மீதி உள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்கி இஞ்சி, தக்காளி சேர்த்து மேலும் வதக்கவும்.

 பிறகு அரைத்த தேங்காய் விழுது, பூண்டு விழுது, வெங்காய மசாலா விழுது சேர்க்கவும்.

 இதனுடன் ஊறிய சிக்கன் துண்டுகள், தேவையான உப்பு இரண்டு கப், தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி இரண்டு விசில் வந்ததும் இறக்கவும்.
 புதினா கொத்தமல்லியை மேலே தூவி சாதம் நான் ரொட்டியுடன் பரிமாறவும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)