ஒரு கப் பால் பவுடர், ஒரு கப் வெண்ணெய், ஒரு கப் சர்க்கரை சேர்த்துக் கிளறி பூத்து வரும்போது இரண்டு ஸ்பூன் கோக்கோ பவுடர் தூவி தட்டில் கொட்டி வில்லைகள் போட்டால் சாக்லேட் கேக் ரெடி.
உக்காரை செய்யும்போது இளகி ஆறி வரும்போது வறுத்த தேங்காய் துருவலை சேர்த்து கிளறினால் சுவை சூப்பராக இருக்கும்.
அச்சு முறுக்கு செய்ய மாவு அரைக்கும் போது அரை கப் பொட்டுக்கடலை சேர்த்து அரைத்தால் முறுக்கு கரகரப்பாக இருக்கும்.
குக்கரில் சாதமாக்கி சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. சாதத்தை வடித்தும் இட்லியை அவிழ்த்தும் சாப்பிட வேண்டும்.
குக்கரில் சமைக்கும்போது கழிவுநீர் வெளியேறாது இதனால் அதிகப்படியான கார்போஹைட்ரேட் சாதத்தில் இருக்கும் இதை உண்ணும் போது வந்த தன்மை உண்டாக்கும்.
குழம்பு, பொறியலோ கண்டிப்பாக கடுகு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கருவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும் அப்போதுதான் சுவை கூடும்.
வடையில் துளையிடுவதற்கு காரணம் இருக்கிறது அப்படி செய்தால் தான் அதிக எண்ணெய் அது இழுக்காது சீக்கிரம் வேகவும் செய்யும்.
அதேபோல எண்ணெயிலிருந்து வடையை கரண்டியால் எடுக்கக் கூடாது இப்படி செய்தால் எண்ணெய் அள்ளி வரும். அதனால் கம்பியால் குத்தி தான் வடையை எடுக்க வேண்டும்.
ஸ்வீட் சோமாேஸ் செய்யும் போது பொட்டுக்கடலையை மிக்ஸியில் நைசாக பொடி செய்து அத்துடன் வறுத்த முந்திரி பருப்பு, துருவிய கொப்பரை, சர்க்கரை, ஏலக்காய் தூள் இவற்றை சேர்த்து சோமாசில் பூரணமாக அடைத்து வைத்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
குலோப் ஜாமுன் கோலி போல் கெட்டி கடினமாக இருக்கிறதா? ஜீராவுடன் குலோப்ஜாம்களை அடுப்பில் வைத்து உடையாமல் சிறிது நேரம் கிளறி காெடுத்தால் மென்மையாகிவிடும்.