கேரட் ஐஸ்கிரீம்

kuttybabuPPT
0
கேரட் ஐஸ்கிரீம் 
தேவையானவை 

கேரட் வேக வைத்தது அரைத்த விழுது - ரெண்டு கப்

 பால் - ஒரு கப்

 சர்க்கரை - கால் கப்

 பிஸ்தா பருப்பு -  எட்டு 

வெண்ணிலா எசன்ஸ் - கால் டீஸ்பூன்

 ஃபுட் கலர் - அரை டீஸ்பூன் 

செய்முறை

கேரட் விழுதுடன் சர்க்கரை சேர்த்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் பாலையும் சேர்த்து கலக்கவும்.

 கலவையை அடுப்பில் வைத்து கொதித்ததும் இறக்கி ஆறவிடவும்.

 கலவை ஆறியதும் வெண்ணிலா எசன்ஸ், ஃபுட் கலர் சேர்த்து கலக்கி ஃப்ரீஷரில் வைக்கவும்.
 அரைமணி நேரம் கழித்து எடுத்து மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி அதில் ஒன்று இரண்டாக பாெடித்த பிஸ்தா பருப்பையும் சேர்த்து கப்புகளில் ஊற்றி மீண்டும் ஃப்ரீஸரில் வைத்து ஐஸ்கிரீம் ஆனதும் எடுத்து பரிமாறவும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)