தேவையானவை
பனங்கிழங்கை ஆய்ந்து சுத்தம் செய்து நறுக்கியது - இரண்டு கப்
கடலைப்பருப்பு - ஒரு கப்
வாழைப்பூ - ஒரு கப்
உளுந்தம் பருப்பு - ரெண்டு மேசை கரண்டி
அரிசி - ரெண்டு மேசை கரண்டி
வெங்காயம் நறுக்கியது - அரைக்கப்
பெருங்காயம் - அரை சிட்டிகை
சீரகம் - ஒரு தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் - 4
கருவேப்பிலை - ஒரு கைப்பிடி
கொத்தமல்லி நறுக்கியது - ஒரு கைப்பிடி
கல் உப்பு -தேவைக்கு ஏற்ப
எண்ணெய் - பொரிக்க
செய்முறை.
கடலைப்பருப்பு ,உளுந்தம் பருப்பு மற்றும் அரிசியை ஒன்றாக ஊறவைத்து கொள்ளவும்.
3 மணி நேரம் கழித்து தண்ணீரை வடித்து விடவும்.
முதலில் மிக்ஸியில் மிளகாய், சீரகம், உப்பு ,பெருங்காயம் சேர்த்து நன்கு பொடி செய்யவும்.
பிறகு ஊற வைத்த பருப்பை தண்ணீர் சேர்க்காமல் இரண்டு பாகமாக பிரித்து அரைக்கவும்.
மசாலா வடைக்கு அரைப்பதை விட சற்று நைசாக இருக்கலாம் .
பிறகு வேகவைத்து சுத்தம் செய்த பனங்கிழங்கை தண்ணீர் சேர்க்காமல் அதனுடன் ஐந்து வைத்த வாழைப்பூவை சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.
ஒரு அகலமான பாத்திரத்தில் அரைத்த பருப்பு, நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து பிசையவும்.
கைகளை தண்ணீரில் நனைத்து ஒரு பெரிய எலுமிச்சை அளவு உருண்டையை வடையாக தட்டி பாெரித்தெடுக்கவும்.
மிதமான தீயில் வேக வைத்தால் தான் உள்ளே வரை வேகும்.