தேவையானவை
இடியாப்பம் - இரண்டு
கிரீன் சட்னி - ரெண்டு தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒன்று
பொடியாக நறுக்கிய குடைமிளகாய் - பாதியளவு
துருவிய பன்னீர் - இரண்டு தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு ஏற்ப
சாட் மசாலா - ஒரு தேக்கரண்டி
சேஸ்வான் சாஸ் - சிறிதளவு
மயோனஸ் - சிறிதளவு
செய்முறை
இரண்டு இடியாப்பத்திலும் முதலில் கிரீன் சட்னியை தடவிக்கொள்ள வேண்டும்.
பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய் சேர்க்க வேண்டும்.
பின்னர் துருவிய பன்னீர் சேர்க்க வேண்டும்.
அதன் மீது சிறிதளவு உப்பு தூவி விட்டு பின்னர் சாட் மசாலாவில் தூவவும்
அதன் பிறகு சேஸ்வான் சாஸ் இடியாப்பத்தை சுற்றி விடவும் .
பின்னர் மயோனசை இடியாப்பம் முழுவதும் சுற்றிவிட்டு மேலே ஒரு இடியாப்பத்தை வைத்து மூடி கிரில் வைத்து எடுத்துவிட்டு அதன் மீது மீண்டும் சாட் மசாலா லேசாக தூவி பரிமாற வேண்டும்.
சுவையான இடியாப்ப சான்விச் தயார்.