வீட்டு மிளகாய்த்தூள்

kuttybabuPPT
0
வீட்டு மிளகாய்த்தூள்
தேவையானவை

காய்ந்த மிளகாய் - 500 கிராம் 

முழு மல்லி - 500 கிராம் 

சீரகம் - 200 கிராம் 

வெந்தயம் - 50 கிராம் 

மிளகு - 25 கிராம் 

சோம்பு - 50 கிராம் 

துவரம் பருப்பு  - ஒரு கைப்பிடி

 கடலைப்பருப்பு - ஒரு கைப்பிடி 

கடுகு - மூன்று சிட்டிகை 

கசகசா - மூன்று சிட்டிகை 

அரிசி - 50 கிராம் 

கருவேப்பிலை -  இரண்டு கைப்பிடி

 கட்டிப் பெருங்காயம் - மூன்று துண்டுகள் 

பக்குவம் 

மிளகாய் மற்றும் மல்லியை வெயிலில் நன்கு காய வைக்க வேண்டும்.

 மிளகாய் வத்தலை தவிர மற்ற எல்லா பொருட்களையும் அடி கனமான பாத்திரத்தில் மிதமான சூட்டில் அந்தந்த பொருட்களின் மணம் வரும் வரை சிவக்க வறுக்க வேண்டும்.

 கருவேப்பிலையை முன்னதாக நிழலில் உலர்த்தி வாணலியில் மொறு மொறுவென வறுத்து சேர்த்துக் கொள்ளவும்.

 கட்டி பெருங்காயத்தை எண்ணெயில் பொரித்து சேர்க்கும்போது வாசனை இருந்து கொண்டே இருக்க வேண்டும்.

 தூள் பெருங்காயமும் தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளலாம்.

 இவை அனைத்தும் ஒன்றாக கலந்து மில்லில் அரைக்கும் போது நைசாக கிடைக்கும்.

மிக்ஸில் அரைத்தால் துல்லியமான பதம் கிடைக்காது .

அரவை மில்லைத் தேடி சென்று அரைப்பது நல்லது.
 நான்கு பேர் கொண்ட குடும்பத்துக்கு இந்த அளவில் மிளகாய்த்து உள்ள அரைத்தால் 5 மாதங்களுக்கு வரும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)