தேவையானவை
மண்சட்டி - ஒன்னு
புரோட்டா - மூணு
சில்லி சிக்கன் - 100 கிராம்
பாதாம் -தேவையான அளவு
மல்லி இலை - சிறிதளவு
சிக்கன் கிரேவி - தேவையான அளவு
அவித்த முட்டை - இரண்டு
வாழை இலை வட்டமாக நறுக்கியது - 2
செய்முறை
மண்பானையின் அடியில் வாழை இலையை வைத்து அதில் மென்மையான புரோட்டாவை வைக்க வேண்டும்.
அதன் மீது சில்லி சிக்கனை பரப்பி சிறிதளவு மல்லி இலையை தூவி ஸ்பெஷல் கிரேவி அல்லது வீட்டில் நீங்கள் வைத்த சிக்கன், மட்டன் குழம்பு ஊற்ற வேண்டும்.
அதன் மீது இன்னொரு புரோட்டாவை வைத்து மேலும் சிறிதளவு சிக்கனை வைக்க வேண்டும்.
பிறகு மீண்டும் கிரேவியை ஊற்றி மல்லி இலைகளை தூவி இன்னொரு புரோட்டாவை வைக்க வேண்டும்.
கடைசியாக பாதாம் பருப்புகளை தூவி அவித்த முட்டையை நறுக்கி மேலே வைத்து மீண்டும் கிரேவியை ஊற்றி வாழை இலையால் மூடி மண் பானையோடு அடுப்பில் வைத்து இரண்டு நிமிடங்கள் அப்படியே விட வேண்டும்.
வாழை இலையின் சுவையும், மண்பானையின் மனமும் சேர்ந்து புதிய சுவையை தரும்.