தேவையானவை
ஒன்று இரண்டாக உடைத்த மிக்ஸட் நட்ஸ் - ஒரு கப்
விதை நீக்கிய பேரிச்சை - ஒரு கப்
காய்ந்த திராட்சை - ஒரு டேபிள் ஸ்பூன்
கசகசா - அரை டேபிள்ஸ்பூன்
நெய் - ஒன்னரை டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் தூள் - அரை டீஸ்பூன்
செய்முறை
நட்ஸை வெறும் கடாயில் மிதமான தீயில் வேக லேசாக வறுத்து தனிய வைக்கவும்.
திராட்சையை மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் விழுதாக்கவும்.
கடாயில் நெய்யுற்றி திராட்சை போட்டு லேசாக வறுத்து பேரிச்சை விழுதை சேர்த்து நன்றாக கிளறி ஏலக்காய் தூள், நட்ஸ் சேர்த்து நன்றாக கிளறவும்.
கலவை திரண்டு வரும்போது அடுப்பை அணைக்கவும்.
சூட்டிலேயே கலவையை சப்பாத்தி ரோல் போல உருட்டி கசகசாவில் புரட்டி எடுத்து சில்வர் பாயில் சுருட்டி ரெண்டு மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
பின்னர் எடுத்து வட்டமாக நறுக்கி காற்று போகாத டப்பாவில் அடைக்கவும்.