தேவையானவை
ஆட்டுக்குடல் - 250 கிராம்
சின்ன வெங்காயம் - 50 கிராம்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்
முழு மிளகு - கால் டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
சோம்பு - கால் டீஸ்பூன்
பச்சை மிளகாய் - ஒன்று
எண்ணெய் - இரண்டு தேக்கரண்டி
பட்டை - சிறிய துண்டு
கருவேப்பிலை, இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு - சிறிது அளவு
செய்முறை
குடலை தண்ணீர் ஊற்றி ஊற வைத்து சுத்தம் செய்யவும்.
குறைவான சூட்டில் ஒரு மணி நேரம் தண்ணீரில் கொதிக்க வைத்த பிறகு மீண்டும் சுத்தப்படுத்தவும் .
இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், சிறிது உப்பு சேர்த்து 15 நிமிடங்கள் விறகடுப்பில் வேகவைத்த பிறகு வெந்த குடலை தனியாக எடுத்து வைக்கவும்.
அடிகனமான பாத்திரத்தில் கால் டீஸ்பூன் சீரகம் மற்றும் முழு மிளகு சேர்த்து மென்மையாக வறுத்து தட்டி வைக்கவும் பாெடிக்க வேண்டும் என்று அவசியமில்லை.
வறுத்தால்தான் குடல் வருவல் மணமாக இருக்கும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் லேசாக தட்டிய சோம்பு, பட்டை, பச்சை மிளகாய் மீதம் இருக்கும் சீரகம், கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
இத்துடன் மஞ்சள் தூள், உப்பு, சீரகத்தூளையும் சேர்த்து நன்கு வதக்கி இதனுடன் வேகவைத்த குடல் சேர்த்து பிரட்ட வேண்டும்.
மிளகுத்தூள் சேர்த்து மீண்டும் சில நிமிடங்கள் மட்டும் வதக்கவும் .
பிறகு தட்டி வைத்துள்ள மிளகு, சீரகம் சேர்த்து கிளறி இறக்கவும்.