தேவையானவை
பரங்கிக்காய், வாழைக்காய், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, சேப்பங்கிழங்கு, சேனைக்கிழங்கு, கொத்தவரங்காய், பூசணிக்காய் எல்லாவற்றையும் ஒரே அளவாக நறுக்கியது - மூன்று கிண்ணம்
திக்கான புளி கரைசல் - ஒரு கிண்ணம்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - ஒன்று
வெல்லம் துருவியது - ஒரு மேசை கரண்டி
வறுத்தரைக்க - பச்சரிசி இரண்டுமேசை கரண்டி
கருப்பு எள் - ஒரு மேசை கரண்டி
காய்ந்த மிளகாய் - ஐந்து
தேங்காய் துருவல் - கால் கிண்ணம்
கடலை பருப்பு - ஒரு தேக்கரண்டி
தனியா - ரெண்டு தேக்கரண்டி
எண்ணெய் - இரண்டு தேக்கரண்டி
பெருங்காயம் - அரை தேக்கரண்டி
தாளிக்க
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
கருவேப்பிலை - 10 இதழ்கள்
செய்முறை
ஒரு வாணலியில் எண்ணெய் விடாமல் பச்சரிசி,எள் இரண்டையும் தனித்தனியே வறுத்துக்கொள்ளவும்.
பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு வறுக்க கொடுத்த அனைத்து பொருள்களையும் வறுத்து , முதலில் வறுத்த அரிசி ,எள்ளையும் சேர்த்து மிக்ஸியில் தண்ணீர் விட்டு கொரகொரப்பாக அறுத்து வைக்கவும்.
ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் இரண்டு கிண்ணம் நீர் விட்டு உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து பச்சை மிளகாய் அறிந்த அனைத்து காய்கறிகளையும் சேர்த்து வேக விடவும்.
காய்கள் அரைவேக்காடு வந்ததும் புளி கரைசலையும் சேர்த்து தாளித்து விடவும்.
புளியுடன் சேர்ந்த காய்கள் வந்ததும் அரைத்த விழுதுனையும் சேர்த்து துருவிய வெல்லத்தையும் சேர்த்து கொதி வந்ததும் தாளித்த கொடுக்கவற்றை தாளித்து சேர்த்து கலந்து இறக்கவும் .
திருவாதிரை கலியுடன் இந்த தாளம் குழம்பு தொட்டு சாப்பிடலாம்.