தேவையானவை
சிறிய உருளைக்கிழங்கு - 200 கிராம்
பாஸ்மதி அரிசி - ஒரு கிண்ணம்
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
புதினா, கொத்தமல்லி தழை - சிறிதளவு
வெங்காயம், தக்காளி - 2
தயிர் - கால் கிண்ணம்
கரம் மசாலா, மிளகுத்தூள் - கால் தேக்கரண்டி
மிளகாய் தூள் - கால் தேக்கரண்டி
பட்டை, பிரியாணி இலை - ஒன்னு
கிராம்பு, ஏலக்காய் - தலா ரெண்டு
எண்ணெய் - இரண்டு தேக்கரண்டி
நெய் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை
உருளைக்கிழங்கை ஊசியில் குத்தி விடவும்.
பிறகு அத்துடன் உப்பு, மிளகாய்த்தூள், மிளகுத்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.
அரிசியை கழுவி 10 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய், நெய் சேர்த்து சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை போட்டு பொரிய விடவும்.
பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, தக்காளி, புதினா, கொத்தமல்லி தழை என ஒவ்வொன்றாக சேர்த்து நன்கு வதக்கவும்.
பிறகு உருளைக்கிழங்கு கலவையை சேர்த்து நன்கு வதக்கி இரண்டு கிண்ணம் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும் .
பிறகு ஊற வைத்த அரிசியை சேர்த்து குக்கரை மூடி மூன்று விசில் வந்தவுடன் இறக்கி சூடாக பரிமாறவும்.