பூண்டு மிட்டாய்

kuttybabuPPT
0
பூண்டு மிட்டாய் 
தேவையான பொருட்கள்

சர்க்கரை - அரை கப் 

வெண்ணை - இரண்டு டேபிள் ஸ்பூன்

 தண்ணீர் - கால் கப் 

உரித்த பூண்டு - ஒரு கப் 

உப்பு - கால் டீஸ்பூன் 

செய்முறை 

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் உப்பு கலந்து கொதிக்க வைக்கவும் .

பின்னர் அதில் பூண்டுகளை போட்டு இரண்டு நிமிடம் வேக வைக்கவும்.

 பிறகு வடிகட்டி அதில் குளிர்ந்த தண்ணீரை ஊற்றவும்.

 இப்போது பூண்டுகளை வெளியே எடுத்து சுத்தமான துணியில் கொட்டி ஈரம் இல்லாமல் உலர வைக்கவும்.

 அடி கனமான வாணலியில் வெண்ணெய் மற்றும் சர்க்கரையை போட்டு மிதமான தீயில் நிறமாக வரும் வரை விடாமல் கிளறவும் .

பிறகு அதில் உலர வைத்த பூண்டுகளை போட்டு அவற்றின் மேல் சர்க்கரை கலவை நன்றாக படும்படி கிளறவும்.

 5 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும்.
 ஆறிய பின்பு ஒரு டப்பாவில் பத்திரப்படுத்தி சாப்பிடலாம்.

Post a Comment

0Comments
Post a Comment (0)