சௌராஷ்டிரா பூண்டு குழம்பு

kuttybabuPPT
0
சௌராஷ்டிரா பூண்டு குழம்பு
தேவையான பொருட்கள் 

உரித்த பூண்டு - ஒரு கப்

 குழம்பு மிளகாய் தூள் - இரண்டு டேபிள்ஸ்பூன் 

புளி தண்ணீர் - முக்கால் கப்

 நல்லெண்ணெய் - ரெண்டு டேபிள் ஸ்பூன் 

உப்பு - தேவைக்கு 

தாளிக்க 

கடுகு - கால் டீஸ்பூன் 

வெந்தயம் - கால் டீஸ்பூன் 

மிளகு - கால் டீஸ்பூன் 

சீரகம் - கால் டீஸ்பூன் 

அரைக்க 

பூண்டு - நாலு பற்கள் 

மிளகு - அரை டீஸ்பூன்

 சீரகம் - அரை டீஸ்பூன் 

செய்முறை

புளித்தண்ணீரில் குழம்பு மிளகாய் தூள் போட்டு கட்டி இல்லாமல் கரைத்துக் கொள்ளவும்.

 அரைக்க கொடுத்திருக்கும் பொருட்களை மிக்ஸியில் போட்டு சிறு தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளவும்.

 அடிகனமான வாணிலியில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு ,வெந்தயம், மிளகு, சீரகம் ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக போட்டுத் தாளிக்கவும்.

 பிறகு உரித்த பூண்டுகளை போட்டு சிவக்கும் வரை வதக்கவும்.

 பின்னர் அதில் தயாரித்து வைத்திருக்கும் கரைசலை ஊற்றி அரைத்து வைத்திருக்கும் விழுது மற்றும் தேவையான உப்பு சேர்த்து கலக்கவும்.

 கலவை கொதிக்க ஆரம்பித்ததும் அடுப்பை சிம்மில் வைக்கவும்.

 மேலே எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க வைத்து இறக்கவும்.

 இப்போது சௌராஷ்ட்ரா பூண்டு குழம்பு தயார் .

இதை சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம்.
 இட்லி, தோசைக்கு பொருத்தமானதாக இருக்கும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)