தேவையானவை
உருளைக்கிழங்கு - ஒன்று
அன்னாசிப்பழத்துண்டு - ஒரு கிண்ணம்
சர்க்கரை - அரைக்கின்னம்
நெய் - ரெண்டு தேக்கரண்டி
ஏலக்காய் தூள் - சிறிதளவு.
அன்னாசி எசென்ஸ் - சிறிதளவு
நெயில் வறுத்த முந்திரி திராட்சை - கால் கிண்ணம்
செய்முறை
உருளைக்கிழங்கை வேக வைத்து தோலை நீக்கி மசிக்கவும் .
அன்னாசி பல துண்டுகளை மிக்ஸியில் நன்கு விழுதாக்கவும் .
அடிகனமான பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கு, அன்னாசி பல விழுது, சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்து கிளற வேண்டும்.
கலவை கெட்டியாக வரும்போது நெய் சேர்த்து சிறிது சிறிதாக கிளற வேண்டும் .
கடைசியாக ஏலக்காய் தூள் , நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சையும் சேர்த்து நன்கு கிளறி இறக்கினால் உருளைக்கிழங்கு பைனாப்பிள் அல்வா தயார்.