சேப்பக்கிழங்கு மோர் குழம்பு

kuttybabuPPT
0
சேப்பக்கிழங்கு மோர் குழம்பு
தேவையானவை 

அதிகம் புளிப்பு இல்லாத மோர் - அரை லிட்டர் 

சேப்பக்கிழங்கு - 10 

தேங்காய் திருகியது - ஒரு கப் 

காய்ந்த மிளகாய் - இரண்டு 

மிளகு - 10

 வெந்தயம் ,சீரகம், கடுகு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்

 பெருங்காயத்தூள் - சிறிதளவு

 எண்ணெய் - இரண்டு டீஸ்பூன் 

உப்பு - தேவையான அளவு 

செய்முறை 

வாணலியில் எண்ணெய் விட்டு மிளகு, காய்ந்த மிளகாய் ,கடலைப்பருப்பு, சீரகம் ஆகியவற்றை வறுத்து தேங்காய் துருவல் சேர்த்து நைசாக அரைக்கவும்.

 அரைத்த விழுதை மோருடன் சேர்த்து உப்பு போட்டு கலக்கவும்.

 சேப்பக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து பாதியாக நறுக்கவும்.

 மோர் கலவையுடன் வேகவைத்த சேப்பக்கிழங்கை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கவும்.
 பிறகு கடுகு, வெந்தயம் தாளித்து சேர்த்து பெருங்காயத்தூள் போட்டு கலக்கவும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)